செய்திபுனலில் வெளியான வீடியோ.. பொறி வைத்து பிடித்த காவல்துறையினர் - கன்னியாகுமரியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


எங்கள் செய்திபுனல் முகநூல் பக்கத்தில்  கன்னியாகுமரி மாவட்டத்தில் அரங்கேற்றப்படும் நவீன மோசடி குறித்த வீடியோ பகிரப்பட்டு இருந்தது. அதில் தொடர்புடைய குற்றவாளிகளை தற்போது கைது செய்துள்ளனர் குமரி மாவட்ட காவல் துறையினர்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த ஐயப்ப பக்தர் ஒருவர் அங்குள்ள கடையில் செல்போன் சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் பவர் பேங்க் வாங்கியுள்ளார்.

அது போலியானது என்பது அவர் குமரியைவிட்டுச் சென்ற பிறகு தெரிய வந்தது. மேலும், பவர் பேங்க் என்ற பெயரில் களிமண்ணை அடைத்து வைத்து அதில் சிறிய அளவிலான பேட்டரி வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

தான் ஏமாற்றப்பட்டதுபோல் வேறு யாரும் ஏமாற்றப்படக் கூடாது என நினைத்த அந்த ஐயப்ப பக்தர் தான் வாங்கிய பவர் பேங்க்கை உடைத்து உள்ளே இருந்த களிமண்ணை வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பினார்.

இது தொடர்பான வீடியோ செய்திபுனல் முகநூல் பக்கத்திலும் பகிரப்பட்டு இருந்தது.

 

இந்தக் காட்சிகளைக் கண்காணித்த காவல்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தினர். இதில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சித்திக் என்பவரை கைது செய்தனர்.

அவரை தொடர்ந்து பெங்களூரைச் சேர்ந்த சபீப் உல்லாவை கைது செய்தனர்.  இவர்கள் இரண்டு பேரும் களிமண் அடைக்கப்பட்ட பவர் பேங்கை விற்பனை செய்தது தெரியவந்தது.

அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து ரூ.15,000 பணம், மெமரி கார்டுகள் மற்றும் நூற்றுக்கணக்கான போலி பவர் பேங்க்குகளைப் பறிமுதல் செய்தனர்.

 

வீடியோ இணைப்பு : https://www.facebook.com/seithipunal/videos/544218179375196/

 

 

English Summary

Two men arrested for selling bogus Powerbank


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal