நொந்து போயிருக்கும் விவசாயிகளை மேலும் வதைக்க வேண்டாம் - டி.டி.வி தினகரன்..! - Seithipunal
Seithipunal


மக்களவையில் நிறைவேறிய மூன்று வேளாண் மசோதாக்களை நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்து, இந்த மசோதாக்களை சட்டமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் மக்களவையில் நிறைவேறிய மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியை சேர்ந்த ஹர்ஷ்மத் கர் பாதல் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மக்களவையில் நிறைவேறிய மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 25 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் முழு அடைப்புக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இத்தகைய சுழலில், நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கு டி.டி.வி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்வீட் செய்துள்ளதாவது, "விவசாயத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் சட்ட மசோதாக்களை மாநில அரசுகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளிடம் முழுமையாக ஆலோசிக்காமல் மத்திய அரசு நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றி இருப்பது சரியானதல்ல.

இம்மசோதாக்களில் உள்ள விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களில் திருத்தம் செய்த பிறகே மாநிலங்களவையில் அவற்றை கொண்டுவர வேண்டும்.

நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்மையில் செயல்படுத்தப்படும் எத்தகைய மாற்றமும் விவசாயிகளுக்குப் பயன்தருவதாக மட்டுமே அமைய வேண்டும். அதைவிட்டு விட்டு ஏற்கனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை மேலும் வதைப்பதாக அமைந்துவிடக் கூடாது" என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv tweet about former issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->