"உடனே இதை செய்யுங்கள்." டிடிவி தினகரன் கொதித்தெழுந்து கூறிய வார்த்தைகள்.! - Seithipunal
Seithipunal


கொரானா ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்திற்கு திரும்ப   வெளிமாநிலங்களில் அல்லாடி வரும் தமிழக லாரி ஓட்டுநர்கள் மீட்டெடுக்க நடவடிக்கை வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் பொருட்டு மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு இருக்கின்றன. அத்தியவசிய தேவைக்கு மட்டுமே திறக்கப்படுகின்றன. 

வெளிமானிலங்களில் இருந்து சரக்கு ஏற்றுக்கொண்டு வந்து கொண்டிருந்த லாரி ஓட்டுநர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் போதிய உணவு இன்றி அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில்,"  கொரோனா பாதிப்பைத் தடுப்பதற்காக  ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன.

கொரோனா பாதிப்பைத் தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன.

அதில் சென்ற ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலை அளிக்கிறது. மேலும் லாரிகளில் உள்ள பல லட்ச ரூபாய் சரக்குகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

எனவே,மத்திய, மாநில அரசுகள் இவர்களுக்கு உதவுவதற்கான முன்னெடுப்புகளை உடனடியாக செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்  என்று கூறியுள்ளார். அதில் சென்ற ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலை அளிக்கிறது. மேலும் லாரிகளில் உள்ள பல லட்ச ரூபாய் சரக்குகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது."என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV to recover lorry drivers from other state


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->