ஆற்றலின் இருப்பிடமாக, உலகை இயக்குகிற உன்னத சக்தியாக திகழும் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்த்துகள்- டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


உலக மகளிர் தினத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அன்பின் பெரும் உருவமாக, ஆற்றலின் இருப்பிடமாக, உலகை இயக்குகிற உன்னத சக்தியாக திகழும் பெண்மையைப் போற்றுகின்ற இந்நன்னாளில் மாதர் குலத்திற்கு இனிய மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழ்நாட்டு பெண்களின் வெளிச்சமாக, அவர்களுடைய வாழ்வின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திய        இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருப்பெயரைத் தாங்கி நிற்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அம்மாவின் வழியில் பெண்களுக்காக பாடுபடுவதில் உறுதியோடு இருக்கிறது. 'நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்' பெற்று, 'புதுமைப் பெண்ணொளி வாழி பல்லாண்டு' என்ற பாரதியின் வார்த்தைகளை மெய்யாக்கி,  சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி ஒவ்வொரு பெண்ணும் உயர்ந்து, சிறந்திட இந்த இயக்கம் துணை நிற்கும். 

சர்வதேச அளவில் பெண்களைப் போற்றுவதற்கான சிறப்புமிக்க இந்த நாளில், பெண்களைக் கொண்டாடுவதை நம் வீட்டில் இருந்து தொடங்குவோம். அன்பைக் கொட்டி நம்மை ஆளாக்குகிற, நமக்காக பிரதிபலன் பார்க்காமல் உழைக்கிற, தியாகத் தழும்புகளைச் சுமக்கிற பெண்குலத்தை ஆண்டில் ஒரு நாள் என்றில்லாமல் ஒவ்வொரு நாளும் கொண்டாடி மகிழ்வோம். 

பெண்களை அங்கீகரிப்பதை, அவர்களின் உணர்வுகளை மதிப்பதை நம்முடைய ஆண் பிள்ளைகளுக்கு கற்றுத் தருவோம். பெண்கள் இல்லாமல் இந்தப் பூமி சுற்றாது என்ற பேருண்மையை உணர்ந்து செயல்பட மகளிர் தினத்தில் அனைவரும் உறுதியேற்போம். நிறைந்த மனதோடு பெண்களை வாழ்த்திடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran wishes world womens day


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->