மாணவர்களின் நலனை எண்ணுங்கள்.. முக்கிய கோரிக்கை வைத்துள்ள டிடிவி..!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் பாதிப்பு இன்று தினமும் தொடர்ந்து தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழலில், தமிழக அரசு ஜூன் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கு தேதி அறிவித்தது. மேலும், மாணவர்களுக்கு பேருந்து வசதி, வகுப்பறைக்கு 10 மாணவர்கள் வீதம் அமர வைக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படும். 

தகுந்த பாதுகாப்பு நடைமுறைப்படி மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், இந்த தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்றும், மாணவர்களின் உடலனை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில், " லட்சக்கணக்கான மாணவச்செல்வங்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு தள்ளி வைக்க வேண்டும். 

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று ஆபத்து இன்னும் குறையாததால், 12 மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படவில்லை. இச்சூழலில் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தேவையற்ற விபரீதத்தில் முடிந்துவிடும் என்பதை  உணர்ந்து அரசு செயல்பட வேண்டும் " என்று கூறியுள்ளார்.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran request to govt about


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->