விலைக்கு போறது போயிட்டு தான் இருக்கும்., என்னுடன் இருப்பவர்கள் கொள்கை வாதிகள் - டிடிவி.! - Seithipunal
Seithipunal


திருச்சியில் உள்ள அண்ணாமலை நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழககத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரதமரை சந்தித்தது தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.  

அதிமுக கட்சியை மீட்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வியை கடந்து, எங்களது இலக்கினை நோக்கி நாங்கள் தொடர்ந்து பயணம் செய்வோம். அதிமுக - அமமுக இணையுமா? என்றால் என்னிடம் பதில் கிடைக்காது. கொள்கைக்காக வந்தவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். 

சுயநலத்திற்கு அரசியல் பாதையில் வந்தவர்கள் விலைபோகக்கூடியவர்கள். அவர்கள் விலைக்கு போய்கொண்டு தான் இருப்பார்கள். அதிமுகவை மீட்க வேண்டும் என்ற எங்களின் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும். அதனை செய்து வருகிறோம். முன்னாள் அமைச்சர் வீட்டில் நடந்த ரெய்டு விவகாரத்தில், உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் பழமொழியை நினைவில் கொள்ளுங்கள். 

அதிமுக கட்சியானது அது தொடங்கிய காலத்தில் இருந்தே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா., சசிகலா ஆகியோரின் தலைமையில் தான் இருந்தது. தற்போது தான் அது மாறி இருக்கிறது. மீண்டும் சரி செய்யப்படும். திமுக ஆட்சியில் மகிழ்ச்சியான விஷயம் குறித்து யோசனை செய்து பதில் சொல்கிறேன். திமுகவினர் கடந்த காலத்தில் எதிர்த்து போராடியதை, அவர்களே மீண்டும் செகிறார்கள். சொன்னதை மறந்து செயல்படுகிறார்கள். திமுக ஆட்சியில் மகிழ்ச்சியை விட அவர்கள் பேசி வாக்குசேகரிக்க அளித்த வாக்குறுதியை நினைத்து சிரிப்பு வருகிறது " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Pressmeet 27 July 2021 Trichy


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->