ஆர்வ மிகுதியின் காரணமாக சிலைகள் அமைத்தால், சட்டரீதியாக எதிர்கொள்ளுங்கள் - டிடிவி கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


கண்ணியமற்ற முறையில் தேவர் திருமகனார் சிலை அகற்ற செய்த அரசும், காவல்துறையும் அதிகார ஆணவத்துடன் நடந்துகொள்ளகூடாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பொதுமக்களும் பொறுப்போடு நடந்து கொள்ளவேண்டும்! தேசியத்தையும் தெய்வீகத்தையும் இருகண்களாக பாவித்த தேவர் திருமகனார் அவர்கள் எல்லா தரப்பு மக்களாலும் மதிக்கப்படும் பெருமைக்கு உரியவர். அவருக்கு பெருமைசேர்க்கும் வகையிலும், மரியாதை செலுத்தும் வகையிலும் அவருக்காக சிலைகள் அமைக்கும்போது, அரசிடம் உரிய முன் அனுமதி பெற்று, அனுமதிக்கப்பட்ட இடங்களில் வைப்பதுதான் தேவர் பெருமகனாருக்கு நாம் செய்யும் நிஜமான மரியாதை ஆகும்.

ஒருசிலர் ஆர்வ மிகுதியின் காரணமாகவோ, விதிமுறைகள் பற்றி அறியாமலோ உரிய அனுமதியின்றி தேவர் பெருமகனாரின் சிலைகளை நிறுவிவிட்டால், காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்ட நடைமுறைகளை எடுத்துச்சொல்லி, கண்ணியமான முறையில் அந்த சிலைகளை தற்காலிகமாக அகற்றி, உரிய அனுமதிகளுக்குப் பிறகு நிரந்தரமாக அவை நிறுவப்பட வழிவகை செய்ய வேண்டும்.

அப்படிச் செய்யாமல், இரவோடு இரவாக ஊருக்குள் புகுந்து, சம்பந்தப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தைகூட நடத்தாமல், அனுமதியின்றி நிறுவப்பட்ட சிலை என்றாலும் கூட புல்டோசர் கொண்டு அச்சிலைகளை அகற்றுவதை எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் பின்னணியில் காவல்துறையினர் செய்யும் கண்ணியமற்ற இந்தச் செயல் அந்தத் தலைவருக்கு அவமரியாதை செய்வது மட்டுமல்ல... அரசின் அதிகார, ஆணவப்போக்கை காட்டுவதாகவும் இருக்கிறது.

இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் சம்பந்தப்பட்ட மக்களும், காவல்துறையும் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Condemn Madurai Devar Statue Removed by Police and Peoples Violent


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->