அஞ்சல்துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு?.. டிடிவி தினகரன் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


அஞ்சல் துறை தேர்வுகளுக்கான மொழிகளின் பட்டியல் மத்திய அரசால் வெளியிடப்பட்ட நிலையில், மொழிகளின் பட்டியலில் தமிழ் மொழி தொடர்பான தகவல்கள் இடம்பெறவில்லை. முன்னதாக மத்திய அரசு அஞ்சல் துறை தேர்வுகளுக்கான பட்டியலில் தமிழ் மொழி இடம்பெறும் என்று அறிவித்து இருந்தது. 

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் தமிழ் மொழி பட்டியல் இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும் தனது கண்டனத்தை தெரிவித்து கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்த ட்விட்டில், " அஞ்சல் துறை தேர்வுகளுக்கான மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம்பெறாமல் இருப்பது ஏற்புடையதல்ல. ஏற்கனவே இது தொடர்பாக மத்திய அரசு அளித்திருந்த வாக்குறுதியின்படி தமிழிலும் அஞ்சல் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். எனவே, இதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை திருத்தம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Condemn about Indian Post Office Exam Tamil Language Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->