நீதிமன்றத்தில் சரணடைந்த டி.டி.எப் - ஜாமினில் விடுவிப்பு..! - Seithipunal
Seithipunal


டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவை இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து, 150 கிலோமீட்டர் வேகத்தில் தான் பைக் ஓட்டுவதையும், பின்னால் அமர்ந்துள்ள ஜி.பி.முத்து ஹெல்மெட் அணியாமல் பயத்தில் அலறுவதையும் வீடியோ எடுத்து அதை தனது யூ டியூப் சேனலில் டிடிஎப் வாசன் வெளியிட்டு இருந்தார்.

சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோ வைரலானது. அதே நேரம் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதன் காரணமாக கோவை மாநகரில் உள்ள போத்தனூர் காவல் நிலையத்தில் டி.டி.எஃப் வாசன் மீது இரண்டு வழக்கும்,சூலூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, நேற்று யூடியூபர் டி.டி.எப் வாசன் மதுக்கரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன் பிறகு இரண்டு நபர்கள் உத்தரவாதம் கொடுத்ததன் பேரில் மாலை அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTF vasan released on bail


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->