இந்தியா, வடகொரியா, ரஷியாவை அழைக்கும் ட்ரம்ப்..!! - Seithipunal
Seithipunal


ஜி 7 உச்சி மாநாட்டிற்கு இந்தியா, தென்கொரியா, ரஷியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளை அழைக்க விரும்புவதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஜி 7 மாநாடு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக ட்ரம்ப் தெரிவிக்கையில், ஜி 7 தற்போது காலாவதியாகியுள்ளது. இந்த ஜி 7 மாநாட்டிற்கு இந்தியா, தென்கொரியா, ரஷியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளை அழைக்க விரும்புகிறேன். 

இப்போதைய ஜி 7 மாநாடு என்பதை நான் உணராத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜி 7 மாநாடே தடையாகும் அளவில் உலகில் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஜி 7 மாநாடு வாஷிங்டனில் ஜூன் மாதம் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. 

இந்த மாநாட்டிற்கு அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளை அழைக்க விரும்புகிறேன். இதனைப்போல சீனாவின் எதிர்காலம் குறித்து பேசவும் விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trump call to G 7 function after September


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->