அப்போலோவில் இட்லி விலை இவ்வளவு ரூபாயா!! கலாய்த்த இணையவாசிகளினால் கலங்கிய அப்போலோ!! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழ்நாட்டில் ஊடகத்துறையினருக்கு பிரேக்கிங் நியூஸ்களுக்கு பஞ்சமின்றி இதுவரை உள்ளது. கடந்த வருடம் இதே நாள் தமிழகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. 

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி தான் பரபரப்புக்கு காரணம். 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா டிசம்பர் ஐந்தாம் தேதி உயிரிழந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, இப்போது வரை பல வார்த்தைகள் வைரலாகி விட்டது.

இவ்வாறு பரபரப்பாக அவரை பற்றிய நிகழ்வு போய் கொண்டிருந்தாலும், ஒருபுறம் இந்த பிரேக்கிங் நியூஸ்களை வைத்து கலாய்த்து மீம்ஸ் எழுதுவது இளைஞர்களின் வாடிக்கையாகிவிட்டது. தற்பொழுது அப்போல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள ஜெயலலிதா உணவுக்கான செலவு ரூ. 1.17 கோடி என்பதே அவர்களின் தற்போதைய ட்ரெண்டிங்.

ஜெயலலிதா உணவுக்கான செலவு மட்டும் ரூ. 1.17 கோடி எனவும் அப்பல்லோ மருத்துவமனை தகவல் அளித்துள்ளது குறித்து பல்வேறு விதமான மீம்ஸ்கள் இணையத்தில் உலாவுகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trolls about idly rate in apollo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->