ட்விட்டரிலேயே நடவடிக்கை எடுத்த இபிஎஸ்! உடனடியாக மீட்கப்பட்ட இளைஞர்கள்!  - Seithipunal
Seithipunal


திருப்பூரில் பணியாற்றிவந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களை மீட்க கோரி டிவிட்டரில் வந்த கோரிக்கைக்கு தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. 

திருப்பூர்மாவட்டம் கருவம்பாளையம் பகுதியில் பீகாரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பணி செய்து வந்துள்ளனர். இவர்கள் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு அடுத்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தமிழகத்திலேயே தங்கியுள்ளனர்.  அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லல்லு பிரசாத் யாதவின் மகன்களான தேஜ் பிரதாப் யாதவ் தேஜஸ்வி யாதவ் இருவரும் ட்விட்டரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மென்ஷன் செய்து உதவி கோரி இருந்தனர். 

இதனை பார்த்த தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர்களுக்கு ட்விட்டரில் பதிலளித்திருந்தார். இதனையடுத்து உடனடியாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயனை ட்விட்டரில் மென்சன் செய்து நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். 

இதனையடுத்து பீகார் இளைஞர்கள் தங்கியுள்ள இடத்திற்கு சென்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் குழு அவர்களை கவனித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள தமிழர்களை அம்மாநில அரசு விரட்டி அடிக்கும் நிலையில், தமிழக அரசு பிற மாநில தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு செயல்பட்டு வருவது அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tripur collector tske care of bihar employees


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->