விராலிமலை ஐடி ரெய்டு விவகாரம்.. ரூ.50 இலட்சம், கிலோ கணக்கிலான தங்கம் பறிமுதல்?..! - Seithipunal
Seithipunal


விராலிமலையில் வீரபாண்டி என்பவரின் வீட்டில் நடைபெற்ற 14 மணி நேர வருமான வரி சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. 

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் போன்றவை விநியோகம் செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு அரசு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில், வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து விராலிமலையில் உள்ள வீரபாண்டி என்பவரின் வீட்டிற்கு நேற்று பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை நேரடியாகச் சென்று சோதனை மேற்கொண்டனர். 

இந்த சோதனை சுமார் 14 மணி நேரமாக நடைபெற்று வந்த நிலையில், சோதனையின் முடிவில் ரூபாய் 50 இலட்சம் ரொக்கம், கணக்கில் காட்டப்படாத கிலோ கணக்கில் தங்கம் உட்பட முக்கியமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது என தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை வருமானவரித் துறை துணை ஆணையர் மறுத்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TRICHY VIRALIMALAI INCOME TAX RAID 27 MARCH 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->