அதிமுக வேட்பாளருக்கு கொரோனா உறுதி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல, திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. 

தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கட்சி வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Thuraiyur AIADMK Candidate Indira Gandhi Test Positive Corona Virus TN Election 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->