போராட்டத்தின் போது, பெண்கள் மீது இறங்கிய ஆத்தா.! ஆடிய ஆட்டத்தால், ஆடிப்போன அதிகாரிகள்.!  - Seithipunal
Seithipunal


போராட்டம் நடத்திய போது பெண்கள் மீது சாமி இறங்கி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி 61 முதல் 65 வது வார்டு வரை சேகரிக்கப்படுகின்ற கழிவு நீர் அனைத்தும், கீழ கல்கண்டார் கோட்டைப்பகுதியில் வைத்து சுத்திகரிக்கும் வகையில், பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.53 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகின்றது. இதனைதொடர்ந்து விவசாய நிலங்களுக்கு இடையில் அமைந்துள்ள மூன்று ஏக்கர் நிலத்தில் மாவட்ட நிர்வாகம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது.

இது விவசாய நிலம் என்பதால் நிலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கொடுக்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் மூன்று ஏக்கர் நிலத்திற்கு பதில் வேறு நிலம் தருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஆனால், மக்கள் அதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று திருச்சி மஞ்சத்திடல் பாலம் அருகே ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்து இருக்கின்றனர். அப்பொழுது அந்த நிலத்தில் கோயில் இருப்பதாக கூறி சில பெண்கள் கையில் வேப்பிலையை வைத்துக்கொண்டு சாமி ஆடிய காரணத்தால் பதட்டம் ஏற்பட்டது. 

மேலும், போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்ற காரணத்தால் மிகுந்த அச்சம் நிலவியது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Strike by peoples


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->