ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மந்தம்.. விருதை தவறவிட்ட திருச்சி மாநகராட்சி.! - Seithipunal
Seithipunal


சீர்மிகு நகரம் என்று அழைக்கப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மத்திய அரசு இந்தியாவில் உள்ள பல்வேறு நகரத்திற்கு வருடம் தோறும் ரூ.200 கோடி வீதம் ஐந்து வருடத்திற்கு ரூ.1000 கோடி நிதி வழங்குகிறது. இதனால் அந்த நகரம் வளர்ச்சியடைய உதவி செய்கிறது. 

திருச்சி மாநகராட்சிக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி தற்போது வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை வைத்து மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்தல், பூங்கா உருவாக்குதல், வாய்க்கால் சீரமைப்பு, வணிக வளாகம் கட்டுதல், சத்திரம் பேருந்து நிலையம் சீரமைப்பு போன்ற பணிகள் நடைபெற்று வந்தது. 

இந்தியா முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மத்திய அரசு ஆய்வு செய்து, சிறப்புடன் செயல்படும் மாநகராட்சிக்கு விருது வழங்கி வருகிறது. இதன்படி, மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர், குஜராத் மாநிலத்தை சூரத், தமிழகத்தின் ஈரோடு மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகள் பரிசுகளை ஏற்கனவே பெற்றுள்ளது. 

இரண்டாம் நிலை விருது பட்டியலுக்கு 71 மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த பட்டியலில் திருச்சி இடம்பெறவில்லை. திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மந்தமாக நடைபெறுவதே இதற்கு காரணம் என்று மாநகராட்சி வளர்ச்சி ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Smart City Award Loss due to Slow Development Process 29 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->