கள்ளச்சாராயம் விற்பனை செய்த மூதாட்டி சிக்கியது எப்படி?... காமெடியாகி போன கவலைக்குள்ளாக்கும் சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்து வந்ததை தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலையில், கரோனா வைரஸை எதிர்க்க தேவைப்படும் உடலின் நோயெதிர்ப்பு தன்மையை அதிகரிக்க சித்த மருத்துவப்படி, கபசுரக் குடிநீர் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த நிலையில், திருச்சியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கபசுரக் குடிநீர் என்று கூறி கள்ளச்சாராயம் விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. இந்தியா முழுவதுமே ஊரடங்கு காரணமாக கள்ளச்சாராயம், பதுக்கி வைத்து மது விற்பனை செய்வது போன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. இதனை கண்டறிய காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் வழக்கமான கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில், திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், அப்பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கிய மூதாட்டி விஜயாவை (வயது 26) கண்டுள்ளனர். 

மூதாட்டியிடம் சென்று காவல் துறையினர் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டி கப்சுரக்குடிநீர் கேட்டுள்ளனர். காவல்துறை அதிகாரிகளை கண்டதும் மூதாட்டி, கபசுரக் குடிநீர் தீர்ந்துவிட்டது என்று கூறி அங்கிருந்து செல்ல முயற்சித்துள்ளார். இதனையடுத்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொள்கையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. 

மேலும், வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததும் அம்பலமானது. இதனையடுத்து மூதாட்டியின் இல்லத்திற்கு சென்ற காவல் துறையினர் கள்ளச்சாராயம் காய்ச்ச வைத்திருந்த மூலப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy old lady sell home made liquor alcohol


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->