அனிமல் ஹண்டிங் நா எனக்கு உசுரு... ஹியூமனை பொறிவைத்து தூக்கிய காவல்துறை..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடலூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பிரபு என்கிற கவிக்குமார் (வயது 30). இவர் எம்.எஸ்.சி எலக்ட்ரானிக் மீடியா மற்றும் எம்.பி.ஏ பயின்றுள்ளார். 

இவர் அதே பகுதியில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருகிறார். விலங்குகளை வேட்டையாட ஆர்வம் கொண்ட இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து திருச்சி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட காப்புக்காடு பகுதியில் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பான புகாரின் அடிப்படையில், திருச்சி மாவட்ட வன அதிகாரி சுஜாதா நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, தனிப்படையினர் மூலமாக காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு, கடந்த 12 ஆம் தேதி கவிக்குமாரை கைது செய்துள்ளனர். 

பின்னர் அவரது அலைபேசி மற்றும் மடிக்கணினியை சோதனை செய்ததில், பல வேட்டையாடிய விலங்குகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்துள்ளது. இது மட்டுமல்லாது முகநூல் மூலமாக பாகிஸ்தானில் உள்ள கிளப்புடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. 

இவரிடமிருந்து செல்போன்கள் கம்ப்யூட்டர்களை கைப்பற்றிய காவல்துறையினர், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்த வேட்டைக்குக் கவிகுமாரின் தாயார் உடந்தையாக இருந்த நிலையில், அவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த லட்சுமி என்பதும் தெரியவந்துள்ளது. 

கவிகுமார் மற்றும் லட்சுமியை கைது செய்த காவல் துறையினர், இவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கொளத்தூரை சார்ந்த மகாலிங்கத்தையும் கைது செய்துள்ளனர்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Mom and Son arrest hunting Animals


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->