தங்கத்தை போலீஸ் பங்குபோட்டதாக திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையன் புகார்.! - Seithipunal
Seithipunal


திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை தொடர்பாக, வாகன சோதனையில் பறிமுதல் செய்த ஒரு கிலோ தங்கத்தை காவல் துறையினர்  பங்குபோட்டு கொண்டதாக கொள்ளையன் சுரேஷ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை வழக்கு விசாரணை ஒன்றிற்காக  கொள்ளையன் சுரேஷை போலீசார் மதுரை அழைத்து சென்றனர், இதையடுத்து இன்று மீண்டும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  சுரேஷை போலீசார் அழைத்து வந்தனர்.

அப்போது பேசிய சுரேஷ், தனது கொள்ளை கூட்டாளியான மணிகண்டனிடம் திருவாரூர் சோதனைச் சாவடியில் சோதனை செய்த போலீசார் அவனிடம்  ஐந்தே முக்கால் கிலோ தங்கத்தை பறிமுதல் செய்ததாகவும், ஆனால் அதில் நாலே முக்கால் கிலோ தங்கத்தை மட்டும் கணக்கில் காட்டியதாகவும் சுரேஷ் கூறினான்.

இதற்கிடையே, மற்றொரு கொள்ளையனான முருகன் என்பவனை திருவாரூருக்கு அழைத்துச் சென்றிருந்தனர், அங்கு அவனது உறவினர்களிடம் 405 கிராம் நகைகளையும், திருவெறும்பூர் காவிரி ஆற்றங்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகளையும் தோண்டி எடுத்ததாக தெரிவித்தான்.

பின் கொள்ளையன் சுரேஷ் வரும்,16 ஆம் தேதி வரை காவல் நீடிப்பு செய்யப்பட்டு, பெங்களூர் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy lalitha jewellery thief suresh new information about police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->