பெரும் கேள்விக்குறிக்கு சரியான முற்றுப்புள்ளி வைத்த திருச்சி டி.ஐ.ஜி ஆனி விஜயா.. சிக்கிய கருப்பு ஆடுகள்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாநகரை அடுத்துள்ள ராம்ஜி நகர் என்ற பகுதியில் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட கேப்மாரிஸ் என்ற இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கேப்மாரி என்ற வார்த்தை எப்படி உருவானது என்பது இதன் மூலமாக உங்களுக்கு தெரியவரும். இந்த இன மக்களுக்கு திருடுவதே பிரதான தொழிலாகும். 

சுதந்திரத்திற்கு முன்னர் கரூர் அருகே தங்கியிருந்த மக்கள், அங்குள்ள சுற்றுவட்டார கிராமங்களில் கைவரிசை காட்ட துவங்கிவிட்டால், இவர்களின் கொள்ளை சம்பவத்தை தாங்கமுடியாத கிராமத்தினர், இவர்களை விரட்டி அடித்துள்ளனர். இதனையடுத்து இவர்களுக்கு திருந்தி வாழ வாய்ப்பளிக்கும் வகையில், அப்போதே திருச்சி மாவட்ட ஆட்சியர் ராம்ஜி மில்லில் வேலை வாங்கிக்கொடுத்து, இவர்களுக்கு தங்குமிடம் அமைத்து கொடுத்துள்ளார். 

இதன் பின்னர் தான் ராம்ஜி நகர் என்பதே உருவாகியுள்ளது. வேலைக்கு சேர்ந்தாலும் திருட்டு தொழிலை கைவிட முடியாமல் தவித்த நிலையில், சிலர் அதனைத் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். திருச்சியில் உள்ள ராம்ஜி நகரை பொறுத்தவரையில் கட்டப்பஞ்சாயத்து முதல் கஞ்சா விற்பனை என அனைத்தும் அரங்கேறி வந்துள்ளது. 

அரசு சார்பாக பல சலுகைகள் வழங்கினாலும் பலனில்லை. இந்நிலையில், தற்போது மத்திய மண்டல காவல்துறைத் துணைத் தலைவராக இருக்கும் ஆனி விஜயாவிற்கு, இதுகுறித்து பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ராம்குமார் மற்றும் குமரேசன் ஆகிய காவலர்கள் கஞ்சா கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து உரிய விசாரணைக்கு பின்னர் இருவரும் கடந்த 23 ஆம் தேதி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிற காவல் நிலையங்களில் கஞ்சா கடத்துகையில், தங்களின் பழக்க வழக்கம் மூலமாக பேசி சமாளித்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது, இதற்காக பணம் பெற்றுக்கொண்டதும் அம்பலமாகிய நிலையில், இவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Kepmari Caste People Thief Help Police Ganja Supplier Arrest By Police


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->