தடையை மீறி கூட்டம்.. மொத்தமாக தூக்கிய காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு ஐந்தாவது முறையாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகள், மால்கள் போன்றவற்றிற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. 

மேலும், வழிபாட்டுத்தலங்கள் வரும் எட்டாம் தேதி நிபந்தனையுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி குமரன் நகர் பகுதியில் சி.எஸ்.ஐ தேவாலயத்தில் தடையை மீறிய தேவாலய கூட்டமானது நடைபெற்றுள்ளது. பாதிரியார் வில்சன் குமார் தலைமையில் சுமார் 30 பேர் கூடி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஊரடங்கு நேரத்தில் தடையை மீறி தேவாலயத்தில் நோய் பரப்பும் விதமாக பிரார்த்தனை நடத்தியது தவறு என்று சுட்டிக் காட்டி கலைந்து செல்ல வற்புறுத்தியுள்ளனர். இதுமட்டுமல்லாது ஜெபக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பாதிரியார் வில்சன், ஜெயபாலன், பிரேம்குமார், மனோ, வில்சன், செல்வகுமார், குணசேகர் ஆகிய ஏழு பேரின் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது மட்டுமல்லாது இந்த ஜெப கூட்டத்தில் பங்கேற்ற 30 பேரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நபர்கள், சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் இதுபோன்ற சம்பவத்தால் 40 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவியது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Jepam Meeting person arrest by police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->