தேசிய அளவில் இடம்பிடித்த திருச்சி.! மாநகர ஆணையர் கூறிய காரணம்.!  - Seithipunal
Seithipunal


மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்கள் மற்றும் நகராட்சி நிர்வாகங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. 

வீட்டு வசதி, கல்வி, போக்குவரத்து வசதி, சுகாதாரம், பாதுகாப்பு, பொழுதுபோக்கு, பொருளாதார மேம்பாட்டு நிலை சுற்றுச்சூழல் எரிசக்தி பயன்பாடு, பொருளாதார வாய்ப்புகள், கட்டிடங்கள், பச்சை மண்டலம், நகரின் வளர்ச்சி, குடிமக்கள் பார்வை ஆகிய விஷயங்களை அடிப்படையாக கொண்டு வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. 

இதில் மக்கள் தொகை பத்து லட்சத்திற்கும் அதிகமான நகரங்கள், அதற்கு குறைவான நகரங்கள் என்று இரண்டு வகையாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பத்து லட்சத்திற்கும் அதிகமான நகரங்களில் தேசிய அளவில் பெங்களூரு முதலிடத்தையும், சென்னை 4-வது இடத்தையும், கோயம்புத்தூர் 7வது இடத்தையும், மதுரை 22வது இடத்தையும் பிடித்து இருக்கிறது. 

10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட உள்ள நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் சிம்லா இருக்கிறது. தொடர்ந்து வேலூர் 6-வது இடத்திலும், சேலம் 5வது இடத்திலும், திருச்சி 10வது இடத்திலும், திருப்பூர் 18வது இடத்திலும், திருநெல்வேலி 17 ஆவது இடத்திலும், ஈரோடு 24 ஆவது இடத்திலும் இருக்கிறது.

இதுகுறித்து, திருச்சி மாநகர ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், "2018 ஆம் ஆண்டு திருச்சி தேசிய அளவில் 12 வது இடத்தைப் பெற்றிருந்தது, இந்த முறை பத்தாவது இடத்தில் இருக்கிறது, மக்களின் ஒத்துழைப்பின் காரணமாக பல்வேறு அம்சங்கள் திருச்சியில் சிறப்பிக்கப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மக்களின் ஒத்துழைப்பினால் திருச்சி மாநகரம் மேலும் முன்னேற்றம் அடையும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy in 10 th place of list


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->