தலைமையாசிரியரின் செயல்.. நெகிழ்ந்து போகும் கிராம மக்கள்.! கொரோனா காலத்தில் பேருதவி.!  - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உப்பிலியபுரம் அருகே வெங்கடாசலபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் நல்லாசிரியர் விருது பெற்றவர். வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தற்போது தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. 

இதனை தொடர்ந்து வைரஸ் தொற்று மிக அதிகமாக இருந்து மே மாதத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ரவிச்சந்திரன் தன்னார்வலராக பணியாற்றியுள்ளார். கிராம பகுதிகளில் தடுப்பூசி போடுவதற்கான அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார். 

மேலும், ஆதரவற்றவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றார். தற்போது வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இதற்கான கால அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தான் பணிபுரிகின்ற பள்ளியை சுற்றியிருக்கும் கிராமங்களில் தலைமை ஆசிரியர் ரவி தண்டோரா போட்டு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Headmaster Helps to his area


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->