திருச்சி சிறுமி கொலை விவகாரம்.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி.. உறவினர்கள் பக்கம் திரும்பும் விசாரணை.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை அதவத்தூர் பகுதியை சார்ந்தவர் பெரியசாமி. இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவரது மகள் கங்காதேவி (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்த நிலையில், நேற்று (6 ஜூலை 2020) மதியம் 12 மணியளவில் தனது தோழிகளுடன் விளையாண்டுகொண்டு இருந்துள்ளார். 

இதன்பின்னர், வீட்டில் இருந்த குப்பையை சேகரித்து அங்குள்ள முள்காட்டு பகுதியில் கொட்ட சென்றுள்ளார். இதன்பின்னர் மாலை வரை வீட்டிற்கு திரும்பாத நிலையில், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல இடத்தில் தேடியுள்ளனர். இதில் குப்பையை கொட்ட சென்ற இடத்தில் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலை அறிந்தது சம்பவ இடத்திற்கு காவல் அதிகாரிகள், திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் விரைந்து விசாரணை துவங்கினர். பின்னர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், உறவினர்கள் இரண்டு பேர் உட்பட மொத்தமாக 11 பேரை கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த விஷயம் தொடர்பாக 11 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிவுகள் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவில், சிறுமி பாலியல் பலாத்கார துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், முன்னதாக சிறுமி அவரது அண்ணன் முறை உறவினரான செந்தில் என்பவரிடம் கடந்த இரண்டு மாதமாக பேசி வந்த நிலையில், அவருடன் அலைபேசியில் பேசுவதாக இருந்துள்ளார். இதனை அறிந்த பெரியசாமி தனது மகளை கண்டித்ததாகவும் தெரியவருகிறது. விசாரணைக்கு பின்னரே முழுமையான தகவல் வெளியாகும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy girl murder case police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->