#Breaking: நாடககாதலால் ஏமார்ந்து, 6 மாத கர்ப்பிணியான சிறுமி.. விஷமருந்தி தற்கொலை..!! - Seithipunal
Seithipunal


காதலனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் போராட்டம் செய்த சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

திருச்சியில் உள்ள மணப்பாறை பகுதியை சார்ந்தவன் ராம்ஜி. இவனும், அதே பகுதியை சார்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி காதல் வலையில் விழவைத்துள்ளான். இந்த வலையில் விழுந்த சிறுமியும், காமுகன் ராம்ஜியும் காதலித்து வந்துள்ளனர். சிறுமியும், ராம்ஜியும் உறவினர்கள் ஆவார்கள்.

இந்நிலையில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய காமுகன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் 17 வயதாகும் சிறுமி ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். சிறுமி கர்ப்பம் குறித்து முதலிலேயே கூறி திருமணம் செய்து கொள்ள கூறி வற்புறுத்தியுள்ளார். 

இதனை ஏற்க மறுத்த காமுகன் திருமணம் செய்ய மறுப்பு தெரிவிக்கவே, இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதற்குள் சிறுமி ஆறு மாத கர்ப்பிணியான நிலையில், கடந்த மாதத்தில் சிறுமி இது குறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு மட்டும் செய்துவிட்டு, வழக்கை 6 மாதமாக கிடப்பில் போட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனால் தினமும் மனவேதனையில் அவதியுற்று வந்த சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மணப்பாறை காவல் நிலையத்திற்கு முன்பு சென்று தர்ணா போராட்டம் நடத்தினர். 

இந்த சூழ்நிலையில், சிறுமி தற்போது விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும், சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருக்கும் சூழலில், அவரது வயது 17 என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மணப்பாறை காவல் துறையினர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

சிறுமியின் மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பாதுகாப்பு கருதி அங்கு காவல் துறையினர் குவிக்ப்பட்டுள்ளனர். மேலும், சிறுமியை நம்பவைத்து ஏமாற்றிய கொடூரனின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Drama love pregnant child girl suicide police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->