திருச்சி: சிறுவனை கடத்திய கும்பல் சிக்கியது எப்படி?.. திரைப்பட பாணியில் பரபரப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி கண்டோன்மெண்ட் சாலையில் உள்ள தொழிலதிபர் பி.எல்.பி கண்ணப்பன் வீட்டு முன்பு, கடந்த புதன்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்த அவரது 12 வயது கிருஷ்ணன் இண்டிகா காரில் வந்த மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். 

இந்த விஷயம் தொடர்பாக மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, முக்கிய சாலையில் உள்ள சோதனைச் சாவடிகள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டது. சிறுவன் கடத்தப்பட்டு இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளின் அடிப்படையில், காரின் பதிவு எண்ணை சோதனை செய்கையில் அது போலியானது என்பது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், சிறுவனின் குடும்பத்தாருக்கு தொடர்பு கொண்ட மர்ம கும்பல், ரூ.6 கோடி கொடுத்தால் சிறுவனை விட்டுவிடுவதாக தெரிவித்துள்ளது. மர்ம கும்பலை சார்ந்தவன் பேசிய அலைபேசி எண்ணை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். 

இந்த சூழ்நிலைக்கு உள்ளாகவே வயலூர் சோமரசம்பேட்டை அருகே சாலையோரம் நின்றிருந்த ஆட்டோவை கார் இடித்து தள்ளிவிட்டு நிற்காமல் செல்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் அந்த காரை துரத்தவே, வயலூர் சோதனை சாவடியிலும் கார் நிற்காமல் சென்றுள்ளது. 

காருக்குள் இருந்த மர்ம கும்பல், காவல் துறையினர் நம்மை கண்டறிந்து விட்டார்கள் என்று எண்ணி காரை அப்படியே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளது. பின்னர் வயலூர் காவல் துறையினர் காரை சோதனை செய்த போதுதான் சிறுவன் கடத்தப்பட்ட கார் ஆட்டோவை இடித்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.

 

இதனையடுத்து, சிறுவன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தொழிலதிபரின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த மாணிக்கம் பாண்டியன் என்பவன் சிறுவனை திட்டமிட்டு கடத்தியது உறுதி செய்யப்பட்டது. மாணிக்கம் பாண்டியனுக்கு தொழிலதிபர் கண்ணப்பன் கமிஷன் பணம் தரவேண்டிய நிலையில், இதனை தர மறுத்ததால் சிறுவன் கடத்தப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பாண்டியன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சரவணன், திருப்பதி, சதீஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமுறைவாக உள்ள செல்வ குமார் என்பவரை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Business man Kannapan son Kidnapping case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->