திருச்சியில் பகீர்.! 5 நண்பர்கள் கூடி செய்த காரியம்.. சுருண்டு விழுந்து இறந்த இளைஞர்.!  - Seithipunal
Seithipunal


திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் 24 வயதான ஜாவித் என்பவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார், இவரது பக்கத்து வீட்டில் 21 வயது ஆசிக் பாஷா என்பவர் வசித்து வந்தார். இருவரும் நல்ல நண்பர்கள். இவர்கள் பிரசன்னா, உலகநாதன், அன்சாரி என்ற மற்ற நண்பர்களுடன் சேர்ந்து தென்னுர் உழவர் சந்தை அருகே ஒன்று கூடி உள்ளனர். 

இவர்களுக்கு வழக்கமான மது போதை, கஞ்சா திருப்தி அளிக்கவில்லை. எனவே போதையில் அதிகபட்ச உச்சத்தை அடைய வேண்டும் என்று எண்ணி உள்ளனர். இதனால், போதை ஊசியை போட்டுக் கொள்ள ஒரு மாத்திரை 300 ரூபாய் என்று 1500 ரூபாய்க்கு போதை மாத்திரைகளை வாங்கியுள்ளனர். 

அந்த மாத்திரையை தண்ணீரில் கலக்கி அதனை ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளனர். இதை செலுத்திய சில நிமிடங்களில் ஜாவித் சுருண்டு மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட நண்பர்கள் அவரை உடனடியாக திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். 

கல்லூரியில் வைத்து போதைப்பொருள் தயாரிப்பு.! கைதாகும் பேராசிரியர்கள்..  விசாரணையில் பகீர்.!! - Seithipunal

ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் கேன்சர் நோயாளிகள் உடல் வலிக்கு பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரையை தான் போதைக்காக இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். 

இதை செலுத்திக் கொண்டால் உடல் லேசானதை போல இருக்குமாம். இந்த போதை மூன்று முதல் ஐந்து மணி நேரம் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. தென்னூர் அண்ணா நகரை சேர்ந்த ராம்நாத் என்ற நபரிடம் இருந்து நண்பர்கள் இந்த மாத்திரைகளை வாங்கி இருப்பது தெரியவந்தது. 

அனைவரும் ஊசியை செலுத்திக் கொண்ட போது ஜாவீத்துக்கு மட்டும் அந்த ஊசியால் ஒவ்வாமை இருந்ததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரது நண்பர்கள் 4 பேர் மற்றும் ராம்நாத் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy boy death using drugs


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->