மரங்களின் மனிதனுக்கு மக்கள் மனமார பாராட்டு.. அசத்தும் கோவை பேருந்து நடத்துனர்.! - Seithipunal
Seithipunal


மரங்களின் மனிதன் (Tree Man) என்று அழைக்கப்படும் கோவையை சார்ந்த பேருந்து நடத்துனர் மாரிமுத்து யோக நாதனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

மூன்று இலட்சம் மரங்களை கடந்த 30 வருடங்களாக நட்டு, இயற்கையுடன் வாழ்ந்து வரும் மாரிமுத்து யோகநாதன் சுற்றுச்சூழல் ஆர்வலராக இருந்து வருகிறார். தனது சம்பளத்தில் 40 விழுக்காடு மரங்களை வாங்குவதற்கு பயன்படுத்தி வருகிறார். 

மரங்களின் மனிதன், இயற்கையின் நண்பன் என்று அப்பகுதி மக்களால் போற்றப்படும் மாரிமுத்து, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 

இதுமட்டுமல்லாது, தனது பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வரும் நிலையில், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியிடமிருந்து எக்கோ வாரியர் (Eco Warrior) என்ற விருதையும், தமிழக அரசின் சத்ரு சஜால் சேவை வீரர் விருதையும் பெற்றுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tree Man Respected By Local Peoples in Coimbatore Bus Conductor Marimuthu Yoganathan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->