தேசிய தீர்ப்பாயத்தில், போக்குவரத்துத்துறை சமர்ப்பித்த அறிக்கை!  - Seithipunal
Seithipunal


வரும் 2025ம் ஆண்டுக்குள் மின்சார வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக போக்குவரத்துத் துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "வரும் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள், கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தும் அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் உரிமக் கட்டணத்தை தள்ளுபடி செய்வதோடு, 100% வரி விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 2025ம் ஆண்டு இறுதிக்குள், மின்சார வாகனம் மற்றும் மின்னேற்ற உள்கட்டமைப்பு ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு 100% வரி விலக்கு அளிக்கவும், நிலத்தை பத்திரப்பதிவு செய்யும் போது முத்திரைத்தாள் கட்டணத்துக்கு முழு விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் போக்குவரத்து துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

transport deportment report to ngt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->