ரயில் சேவை ரத்து இல்லை.! நாளை முதல் ரயில் சேவை தொடக்கமா? ரயில்வே துறை விளக்கம்.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் இரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டள்ளது. இதற்கிடையே, புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி செல்வதற்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. அதே சமயத்தில் சரக்கு ரயில் சேவை தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

இந்தநிலையில், நாடு முழுவதும் பயணிகள் ரயில், விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் செப்டம்பர் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியானது.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ரயில்வே வாரியம்: நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் எதிரொலியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரயில்கள் ரத்து தொடரும் என மத்திய ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும் ஒரு சில சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

ரயில்களை இயக்குவது அல்லது ரத்து செய்வது தொடர்பாக புதிதாக எந்த சுற்றறிக்கையும் ரயில்வேயா துறை சார்பில் வெளியிடப்படவில்லை. அடுத்த அறிவிப்பு வரும் வரை ரயில்கள் ரத்து தொடரும் என தெரிவித்துள்ளது. இதனிடையே நாளை வெளியாகவுள்ள அறிவிப்பில் ரயில் சேவை தொடக்கப்படுமா என பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train not cancel by september 30


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->