கொட்டும் மழையிலும் கடமையாற்றிய காவலர்... இறுதியில் நடந்த துயரம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், நாகை மாவட்டத்தில் சீர்காழியில் இருந்து சிதம்பரம் இடையிலான ரயில்களை மின் மயமாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், விலை உயர்ந்த செம்பு கம்பிகள் மற்றும் ரயில் பாதைக்கான இரும்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் காரணமாக, பொருட்கள் திருட்டுப் போகாமல் இருக்க பணி நடக்கும் பகுதிகளில் எல்லாம் பாதுகாப்புக்காக காவலர்கள் இரவு நேரத்தில், ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை தொடர்ந்து, நேற்று இரவு திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்புப் படையில் பணியாற்றி வரும் சையத் ரஹ்மத் பாட்ஷா என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அவர் எருக்கூர் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் பொது பலத்த மழை வந்தது. ஆயினும், குடை பிடித்துக் கொண்டு பணியை தொடர்ந்தார். மழை பெய்யததாலும், குடை பிடித்துக் கொண்டிருப்பதாலும் சையது ரயில் வருவதை அறியாமல் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.

அப்போது, அந்த வழியே வந்த விரைவு ரயில் ஒன்று சையது மீது மோதியது. இதில், காவலர் சையது சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற மயிலாடுதுறை காவல்துறையினர் காவலர் உடலை மீட்டு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள்.

கொட்டும் மழையிலும் கடமையை செய்த காவலருக்கு ஏற்பட்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train accident for police in nagai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->