போக்குவரத்து காவலரை  காரை விட்டு அடித்து தூக்கிய இருவர்., பாரிமுனையில் பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து காவலர் மீது காரை மோதிவிட்டு சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பாரிமுனை வடக்கு கடற்கரை காவல்நிலைய போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருபவர் செந்தில் குமரன், இவர் ராஜாஜி சாலையில் நேற்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில இருந்தார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற வெள்ளை நிற மாருதி சுஸுகி காரை அந்த இடத்திலிருந்து எடுக்கும்படி போக்குவரத்து போலீஸ் செந்தில் குமரன் கார் உரிமையாளரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் காரில் இருந்த தண்டையார் பேட்டை நைனா முகமது மகன் பெரோஸ்கானும், அவரது நண்பரான கமாலுதீன் மகன் பெரோஸ்கானும், காரை அந்த இடத்திலிருந்து நகற்ற மறுப்பு தெரிவித்தனர். பின்னர் இவர்கள் இருவரும் காவலர் செந்தில் குமரன் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் வேகமாக காரில் சென்றனர்.

இதில் போக்குவரத்து காவலர் செந்தில் குமரனின் வலது காலில் ரத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து காரை விரட்டிச் சென்று 2 பேரையும் கைது செய்த போலீஸார். போக்குவரத்துக்கு காவலர் செந்தில் குமரன் அளித்த புகாரின்பேரில் 2 பேரையும் கைது செய்து, காரையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

traffic police attacked by car in chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->