வைகோவை ஓட ஓட விரட்டியடித்த பொதுமக்கள்.. ஆத்திரத்தில் எடுக்கப்பட்ட முடிவு..? கதி கலங்கி போன ஆம்புலன்ஸ்..! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல்லில் நடு ரோட்டில் பிரச்சார வாகனத்தை நிறுத்திவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் ஹாரன் அடித்து வைகோவை விரட்டி அடித்தனர்.

திண்டுக்கல் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் திமுகவைச் சேர்ந்த வேலுச்சாமி. இவரை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்தார்.

அதன் ஒருபகுதியாக நேற்று ஒட்டன்சத்திரம், புதுஆயக்குடி, நிலக்கோட்டை, ஸ்ரீராமபுரம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

புது ஆயக்குடி திண்டுக்கல் சாலையில் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டபோது, அவருடன் திமுக துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ, திமுக கொறடாவான ஒட்டன்சத்திரம் எம்எல்ஏ சக்ரபாணி ஆகியோர் உடன் இருந்தனர். ஆனால், வேட்பாளர் வேலுச்சாமி பிரச்சார வாகனத்தில் இல்லை.

அப்போது சாலை நடுவே பிரச்சார வாகனத்தை நிறுத்தி வைகோ பேசினார். வைகோ பேச ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நெரிசலில் ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கிக்கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஹாரன்களை தொடர்ந்து அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வைகோ பாதியிலேயே பிரசாரத்தை நிறுத்தி விட்டு புறப்பட்டார்.

வைகோ பேசிக் கொண்டிருந்தபோது பொதுமக்கள் தொடர்ந்து ஹாரன் அடித்ததும், இதனால் வைகோ தனது பேச்சை பாதியிலேயே நிறுத்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Traffic-jams-during-Vaiko-campaign


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->