நாளை சஷ்டி விரதம்: விரதத்தை கடைபிடிப்பது எப்படி? - Seithipunal
Seithipunal


சஷ்டி விரதம் என்பது மிகப்பெரிய விரதம் ஆகும். திதிகளின் வரிசை படி சஷ்டி என்பது ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஜோதிடத்தில் 6-ம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.

குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் பொய்.  அனைவருமே விரதம் மேற்கொள்ளலாம்.

சஷ்டி விரதத்தை கடைபிடிப்பது எப்படி?

அதிகாலை எழுந்து, குளித்து மனம் உருக  முருகனை வணங்க வேண்டும்.

பூரண கும்பத்தில் தண்ணீர் நிரப்பி மாவிலை வைத்து, தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும், அட்சதையும் இட்டு முருகனை அதில் ஆவாகனம் செய்து மலரிட்டு தீபம் காட்டி வழிபடுவது நல்லது.

விரத நாட்களில் பகலில் தூங்குதல் கூடாது.

சஷ்டி தினத்தன்று இரவிலும் விழித்து இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

ஆறு காலமும் முருகனை பூஜை செய்ய வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow Shasti Viratham


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->