இன்னும் 10 நாளுக்கு ரத்து செய்யப்படும், சுங்கவரி கட்டணம்.!  - Seithipunal
Seithipunal


10 நாட்கள் திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா நடைபெறுகின்றது. இதன் காரணமாக வாகனங்களுக்கு சுங்கவரி கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கின்றார்.

நாளை திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க இருக்கின்றது.   நாளை அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி முன்பு அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் இருக்கும் 61 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட இருக்கின்றது.

இதனை தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். மேலும், முக்கிய விழாவான மகா தீபதிருவிழா 10ம் நாளான வருகிற 10ம் தேதி  நடைபெற இருக்கின்றது. அன்று மாலை  6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரமலையில் மகாதீபம் ஏற்றப்படும். 

351 கேமராக்களும், 8500 காவலர்களும் மகா தீப திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்புப்பணியில் ஈடுபட இருக்கின்றனர். மேலும், தமிழக அரசு 2500 சிறப்பு பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்து இருக்கின்றது. '

இந்நிலையில்,மாவட்டம் முழுவதும் வாகனங்களுக்கு சுங்கவரி கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். மேலும் வாகனங்களுக்கும் கால்நடை சந்தையின் போது கால்நடைகளுக்கும் நடைபாதை கடைகளில் சுங்கவரி என்று வசூலிக்கும் ஆட்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அவர் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tollgate fees free for 10 days


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->