சுங்கக் கட்டண 'விலை உயர்வு' அதிர்ச்சி...! லாரி உரிமையாளர்கள் கொதிப்பு...! -அடுத்தகட்ட நடவடிக்கை என்ன...?
Toll price hike shocks Lorry owners furious What next step
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 60 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கான திருத்தப்பட்ட சுங்கக் கட்டண உயர்வு, சட்டசபை தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையேயான சாலைப் பயணச் செலவுகள் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.இந்த கட்டண மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவை சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகள் மற்றும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் அமைந்துள்ளன.
அதன்படி, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகள், தாம்பரம் புறவழிச்சாலையில் செயல்படும் வானகரம் சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களில் புதிய கட்டண நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சென்னை புறவழிச்சாலை பாதையில் உள்ள சூரப்பட்டு, நல்லூர், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பட்டறை பெரும்புதூர் மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் சமயபுரம், கப்பலூர், நாங்குநேரி உள்ளிட்ட முக்கிய சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.
செங்கல்பட்டு அருகே செயல்பட்டு வரும் பரனூர் சுங்கச்சாவடியில் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கான கட்டணம் மாற்றமின்றி ரூ.75 ஆகவே தொடர்கிறது.
ஆனால் கனரக மற்றும் வணிக வாகனங்களுக்கான கட்டணங்களில் உயர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் மாதாந்திர சுங்க பாஸ் பயன்படுத்தும் இலகுரக வணிக வாகனங்களுக்கு ரூ.5 மற்றும் லாரிகளுக்கு ரூ.10 வரை கூடுதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Toll price hike shocks Lorry owners furious What next step