தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா.? என்ன தளர்வு.! அறிவிப்பை வெளியிடப் போகும் முதலமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் பல்வேறு தளர்வுகள், வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு முறையும் நீடிக்கும் போது மத்திய அரசின் அறிவிப்பு, மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனை, மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்கும் மாவட்ட நிலைமை குறித்து ஆலோசிக்கப்படும். 

பொது மக்கள் வாழ்வாதாரம், பொருளாதார மீட்பு இவற்றை கருத்தில் கொண்டு தொடர்ந்து தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். தற்போது பெருமளவு இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. தமிழகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. 

தற்போது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை திரும்பினாலும், இன்னும் ஒரு சில கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்த வகையில் இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மெரினா கடற்கரை உட்பட பொழுதுபோக்கு பூங்காக்கள் முழுமையாக திறக்கப்படவில்லை. 100 பேருக்கு மேல் கூடும் அரசியல் கூட்டங்கள் மற்றும் திருமணத்திற்கு குறைந்த அளவில் கூற வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பத்தாம் கட்ட ஊரடங்கு வரும் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. பதினோராம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடனும், பிற்பகலில் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today tn cm meeting for lock down


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->