திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகாதீபம் இன்றுடன் நிறைவு.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது. மாதந்தோறும் இந்த ஆலயத்தில் திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவே பெரிதும் போற்றப்படுகிறது. தீபஜோதி வழிபாடானது, இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகளையும், இடையூறுகளையும், கிரக பாதிப்புகளால் உருவாகும் கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளே தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் (டிசம்பர் 01) அதிகாலை 5.30 மணியில் இருந்து 7.05 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து விழா நடைபெறும் நாட்களில் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளின் வீதி உலா நடைபெற்று முடிந்தது.

டிசம்பர் 07ஆம் தேதி காலை மகா தேரோட்டம் தொடங்குகிறது. காலையில் தொடங்கி நள்ளிரவு வரை மகா தேரோட்டம் நடைபெற்று முடிந்தது. விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் பவனி வரவுள்ளனர். ஒரே நாளில் 5 தேர்கள் பவனி வருவது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் மாதம் 10ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்பட்டது. மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றப்பட்டது.

மகாதீபம் கார்த்திகை தீபத் திருவிழா நாளான (டிசம்பர் மாதம் 10ஆம் தேதி) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

ஏற்றிய நாளில் இருந்து மகா தீபம் தொடா்ந்து 11 நாள்களுக்கு எரிய வைக்கப்படும். இதற்காக, தினமும் 300 முதல் 350 கிலோ நெய்யும், சுமாா் 1,000 மீட்டா் திரியும், 2 கிலோ கற்பூரமும் பயன்படுத்தப்படும். தீபம் ஏற்றிய டிசம்பா் 10-ஆம் தேதியில் இருந்து 11 நாள்களுக்குப் பிறகு இன்று அதிகாலையுடன் இந்த தீபம் நிறைவு பெற்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today thiruvannamalai deepam end


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->