முல்லைப்பெரியாறு அணைக்கு இன்று எப்படிப்பட்ட சிறப்பான நாள் என்று தெரியுமா?.! கொண்டாட்டத்தில் மக்கள்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகேயுள்ள கேரளாவின் எல்லைப்பகுதியில் முல்லைப்பெரியாறு அணையானது அமைந்துள்ளது. இந்த அணையின் மூலமாக தேனி., மதுரை., திண்டுக்கல்., சிவகங்கை., இராமநாதபுரம் மாவட்டங்களில் இருக்கும் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெற்று வந்தது. மேலும்., கடந்த 18 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் தென்தமிழக பகுதியில் விவசாயம் நலிவடைந்ததை அடுத்து., மக்கள் அனைவரும் பசி - பட்டினியால் வாடி., பஞ்சம் பிழைப்பதற்கு பிற ஊர்களுக்கு சென்றிருந்தனர். 

இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு., விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று எண்ணி., புதிய ஆணையினை கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் சிவகிரி மலைப்பகுதியில் உருவாகி பெருந்துறை ஆறு., சின்னாறு., சிறுதோணியாறு., கட்டுப்பணையாறு., இடமலையாறு மற்றும் முல்லை பெரியாறு போன்ற ஆறுகள் அனைத்தும் அரபிக்கடலில் கலந்துகொண்டு இருந்தது. இந்த ஆற்றின் நீரை சேமித்து., தமிழகத்திற்கு திருப்பி விடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 

mullai periyar dam, mullai periyar dam images, முல்லை பெரியாறு அணை,

இந்த விசயத்திற்கு கடந்த 1798 ஆம் வருடத்தின் போது இராமநாதபுரம் சேதுபதி மன்னர் முதல் நபராக முயற்சியை மேற்கொண்டு., அன்றைய பிரிட்டிஷ் அரசின் அனுமதியோடு பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் திட்டதிற்கான அறிக்கை தக்க செய்யப்பட்டு., முல்லைப்பெரியாறு பகுதியில் இருக்கும் மலை மற்றும் குன்றுகளை இணைத்து தண்ணீரை வைகை ஆற்றில் திருப்ப முடிவு செய்யப்பட்டது. இந்த தருணத்தில்., அணைகட்டி முடிக்கும் பட்சத்தில்., தேங்கும் நீரானது திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குள் வரும் என்பதால் அப்போதே பிரச்சனை எழுந்தது. 

பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னர் கடந்த 1886 ஆம் வருடத்தின் அக்டோபர் மாதத்தில் 26 ஆம் தேதியன்று பெரியார் அணைக்கான ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு., இந்த அணையில் இருந்து கிடைக்கும் நீர் அனைத்தும் தமிழகத்திற்கு மட்டும் என்ற நோக்கத்துடன் 999 வருடங்களுக்கு பதிவுகள் செய்யப்பட்டது. இந்த ஆணையினை கட்டுவதற்கு மொத்தமாக ரூ.43 இலட்சம் செலவில்., கர்னல் ஜான் பென்னி குவிக் தலைமையிலான பிரிட்டிஷ் இராணுவ கட்டுமானத்துறை அணைக்கட்டும் பணியை துவங்கியது.    

mullai periyar dam, mullai periyar dam images, முல்லை பெரியாறு அணை,

இந்த தருணத்தில்., திடீரென ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறையின் காரணமாக பணிகள் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து., பென்னி இங்கிலாந்தில் இருக்கும் தனது சொத்துக்களை விற்பனை செய்து கடந்த 1895 ஆம் வருடத்தில் முல்லை பெரியாறு அணையை வெற்றிகரமாக கட்டி முடித்தார். கட்டிமுடிக்கப்பட்ட அன்றே தமிழக பதிகளுக்கும் தண்ணீரானது திறந்தும் விடப்பட்டது. இந்த அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு தற்போது 125 ஆவது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த அணைகட்ட பெரும் உதவி செய்த பென்னிக்கு அப்பகுதி விவசாயிகள் சிறப்பித்து கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்தநாள் அன்று பொங்கல் வைத்தும் வழிபட்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today mullai periyar dam 125 th birthday


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->