சென்னையில் பரவலாக மழை.. பொதுமக்கள் அவதி.! - Seithipunal
Seithipunal


சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை லேசான மழை பெய்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்திருந்தது. மேலும் ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களில் தென் தமிழக மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று காலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென லேசான மழை பெய்தது. அந்த வகையில் எழும்பூர், பெரம்பூர், வேப்பேரி, புளியந்தோப்பு, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த மழையால் அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்களும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் சிரமம் அடைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today lite rain in Chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->