கனமழை காரணமாக பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது அன்று முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்  மழை பெய்து வருகின்றது.

 இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு முதல் தற்போது வரை கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காஞ்சிபுர மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்.

அதே போல காஞ்சி-செங்கல்பட்டு  மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், கனமழை பெய்வதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிக்கப்பட்டுள்ளது 

சென்னை போரூர், மதுரவாயல், கோயம்பேடு, வடபழனி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, மீனம்பாக்கம்,மெரினா, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை  பெசன்ட் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு தொடங்கிய மழை இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரை சில இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அலுவலகத்துக்கு செல்வோர் மழையில் நனைந்தபடியே செல்கின்றனர். கனமழையால் தாழ்வான இடங்களில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today holiday for school and college


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->