தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று தமிழக தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தடுப்பு பணி குறித்து தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது.  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கும் என தெரிவித்துள்ளனர். 

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள புதிய தொழில்கள், பிறப்பிக்க வேண்டிய அவசர சட்டங்கள் மற்றும் கொரோனா தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், ஊரடங்கு தளர்வுகள் பற்றியும் விவாதிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த அமைச்சரை கூட்டத்தில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் கேபி அன்பழகன், தங்கமணி, செல்வராஜ் ஆகியோர் தவிர மற்ற அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த அமைச்சரவை கூட்டத்தில் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today all minister meeting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->