கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று.!! - Seithipunal
Seithipunal


நேற்று கொரோனாவால் 526 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 219 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,824 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று 4 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை சார்ந்த இருவரும், திருநெல்வேலியை சார்ந்த ஒருவரும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் காலை உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 3,043 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 279 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் 26 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நாளுக்கு நாள்கொரோனா தொற்று  அதிகரித்து வருகிறது. பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் தற்போது வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today 11 coronavirus positive patient in krishnagiri


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->