நீட்டுக்கு படிங்க, வீண்போகாது அமைச்சர் மா.சு அதிரடி..! - Seithipunal
Seithipunal


நீட் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் சட்ட நடவடிக்கைகளை  முடிக்க முடியாத சூழல் என  - முதல்வர்  ஸ்டாலின்  விளக்கம்..!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்  திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு  ரத்து செய்யப்படும் என  உதயநிதி  பேசிய பேச்சு தற்போது  சமூக வலைதளங்களில் ஒருபுறம் வைரலாகி வரும் சூழலில், தற்போது  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  பேச்சும் பல மடங்கு வைரலாகி வருகிறது. 

தமிழகத்திற்கு  நீட் தேர்விலிருந்து கட்டாயம் விலக்கு பெற்றே தீருவோம் என முழங்கமிட்ட கழகம் தற்போது  நீட் விவகாரத்தில் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறது.  சில தினங்களுக்கு முன்  செப்டம்பர் மாதம் 12  ஆம் தேதி   நீட்  தேர்வு நடைபெறும் எனவும்  அதற்கான விண்ணப்பத்தை மாணவர்கள் போடலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது. 

இதைத் தொடர்ந்து  தற்போது  நீட் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,   ‘நீட் தேர்வுக்கு  படிக்கும் படிப்பு  மாணவர்களுக்கு வீண் போகாது என்றும் அவர்கள் மருத்துவரான பின்பும் அது அவர்களுக்கு பயன்படும்’ எனவும் கூறியிருக்கிறார். இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு  நெட்டீசன்கள் கலாய்த்து வருகின்றனர். நீட்  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

To extend, Minister M. SU. Action in vain


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->