டி.என்.பி.எஸ்.சியில் வன்னியர்களுக்கு துரோகம்.. கொந்தளிக்கும் மருத்துவர் இராமதாஸ்..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு பணியாளர்களை தேர்வு செய்யும் தமிழக அரசு தேர்வு பணியாளர் தேர்வாணையத்தில் கடந்த 5 வருடமாக, தமிழகத்தின் பெரும்பான்மை சமூகமான வன்னியர் சமூகத்தை சார்ந்த ஒருவர் கூட அதிகாரிகளாக நியமனம் செய்யப்படவில்லை. 

இந்த விஷயம் தொடர்பாக ஏற்கனவே பலமுறை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறியுள்ள நிலையில், தற்போது இது குறித்து ட்விட் பதிவு செய்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது, 

" தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்துவதற்கான அமைப்புகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மிகவும் முக்கியமானது. ஆனால், அந்த அமைப்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு 27.11.2019 அன்று மனு அளித்தோம். சமூகநீதி அமைப்பில் பெரும்பான்மை சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல்  உண்மையான சமூகநீதி எவ்வாறு மலரும்? " என்று கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC Comity social justice against with Vanniyars


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->