ஐடிஐ படித்தவர்களுக்கு மின்வாரியத்தில் வேலை கிடையாது - டி.என்.இ.பி அறிவிப்பால் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


ஐடிஐ படித்தவர்களுக்கு மின்வாரியத்தில் வேலை கிடையாது என தமிழக மின்சார வாரிய தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மாவட்ட அளவிலான மின்வாரிய பொறியாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், " ஐடிஐ படித்தவர்களுக்கு மின்வாரியத்தில் வேலை கிடையாது. மின்வாரிய துறைகளில் ஹெல்பர் மற்றும் வயர்மேன் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. 

இந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தனியார் மூலமாக காலிப்பணியிடங்களை நிரப்பி கொள்ளலாம். தனியார் மூலமாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் பட்சத்தில், அவர்களுக்கு மாதம் ரூ.12,360 சம்பளம் வழங்கப்படும். 

வருடத்திற்கு ஒருமுறை 5 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படும். இவர்கள் 3 வருடத்திற்கு மேல் பணியாற்ற முடியாது. வேண்டும் என்றால் ஒருவருடம் கூடுதலாக பணி நியமனம் செய்து கொள்ளலாம் " என்று தெரிவித்துள்ளார். 

இந்த தகவல் ஐடிஐ படித்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். மின்வாரிய தொழிற்சங்கத்தினரும் படித்த மாணவர்களை நேரடியாக பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனியாரை மின்வாரியத்திற்குள் விடும் செயல் வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNEB Latest Announcement 17 December 2020 ITI Students No Job


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->