Breaking || தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் - பதிவு செய்தவர்களின் பட்டியல் வெளியீடு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வேலை வாய்ப்பில்லா சூழ்நிலையில், இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர். இந்திய அளவில் இந்த பிரச்சனை இருந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் அதிகரித்துள்ளது. அதிலும் அரசு பணிக்காக காத்திருப்போர் ஏராளம். 

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இதுவரை 73 லட்சத்திற்கும் மேலானோர் வேலை வாய்ப்பிற்கு பதிவு செய்திருப்பதாக மாநில அரசு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கடந்த மாதம் 31 ந்தேதி வேலை வாய்ப்பிற்காக 34,53,380 ஆண்களும், 39,45,861 பெண்களும், 271 மூன்றாம் பாலினத்தவரும் பதிவு செய்துள்ளனர்.

இதில் வயதுவாரியாக பதிவு செய்தவர்களில், பதினெட்டு வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 23,01,800 பேரும், கல்லூரி மாணவர்கள் 29,88,001 பேரும், 31 வயது முதல் 45 வயது வரை 18,68,931 பேரும், 46 வயது முதல் 60 வயது வரை 2,35,190 பேரும், 60 வயதுக்கு மேல் 5,590 பேரும் பதிவு செய்துள்ளனர். இதில் மாற்றுத் திறனாளிகள் மட்டும் 1,42,292 பேர் பதிவு செய்துள்ளனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN people apply for government job list published


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->