தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்பு.! முதல்வரின் ஆலோசனை கூட்டம்.! வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை பரிந்துரை செய்த்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில், நோய் பரவலை தடுக்கும் விதமாகவும், புதிதாக உரு மாறியுள்ள ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக,  புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கும், கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புக்கும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாக வாய்ப்பில்லை என்றும், வருகின்ற 7 ஆம் தேதி அல்லது 9 ஆம் தேதி வெளியாகலாம் என்று வெளியான அத்தகவல் தெரிவிக்கின்றது. அதற்குள் தமிழக முதல்வர் தலைமையில் மேலும் இரு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற வைப்புத்தகவும், அதன் பிறகே இதுகுறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. 

அதே சமயத்தில், இன்றைய முதல்வரின் ஆலோசனை கூட்டத்தில், வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில், சர்ச், மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN NIGHT TIME LOCKDOWN JAN 2022


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->