கல்லணையை திறந்ததும் அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்கள் சந்திப்பு..! - Seithipunal
Seithipunal


காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் உள்ளிட்ட 6 அமைச்சர்கள் மற்றும் தஞ்சாவூர், திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

குறுவை சாகுபடிக்காக கல்லணை திறக்கப்பட்டுள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மேட்டூர் அணை கடந்த 12ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், கல்லணை திறக்கப்பட்டு இருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதனைத்தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " கல்லணையில் நீர் திறந்துவிட்டுள்ளதால் 3.10 இலட்சம் ஏக்கர் அளவுக்கு குருவை சாகுபடி நடைபெறும். விவசாயிகளிடம் விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்யவும், அது தொடர்பாக ஆலோசனை செய்யவும் தஞ்சாவூரில் தற்போது கூட்டம் நடைபெறவுள்ளது. நன்றி " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Minister KN Nehru Pressmeet at Kallanai 16 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->