கர்ப்பிணிகள் மற்றும் கை குழந்தையுடன் வந்த இளம்பெண்கள்.! திருப்பி அனுப்பிய தமிழக அரசு அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் சார்பில் நடத்தப்பட்ட உடல் தகுதி தேர்வுக்கு கைக்குழந்தையுடன்  இளம்பெண் ஒருவர் கலந்துகொள்ள வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, பெண் காவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானத்தில் உடல் தேர்வு தகுதி நடைபெற்றது.

இதற்காக 400 பேர் அழைக்கப்பட்ட நிலையில், சுமார் 289 பெண்கள் மட்டுமே கலந்துகொண்டனர். கலந்து கொண்ட பெண்களின் சான்றிதழ்கள், உயரம் அளத்தல் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. மேலும் இந்த 289 பெண்களுக்கும் 400 மீட்டர் ஓட்டம் உடல் தகுதியாக நடைபெற்றது. 

இந்த உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது கைக்குழந்தையுடன் வந்தார். அந்த குழந்தை பிறந்து 22 நாட்கள் ஆனதால், இதனை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை அழைத்து உங்களுக்கு மற்றும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறி திருப்பி அனுப்பினர். இதேபோல் இந்த உடற்தகுதி தேர்வில் கலந்துகொள்ள வந்த இரண்டு இளம் கர்ப்பிணிப் பெண்களையும் மறு வாய்ப்பு வழங்குவதாக கூறி அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர்.

மேலும் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவர் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து, அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் கலந்து கொள்ள வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn lady police exam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->